அமெரிக்க நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவதை தொடர்ந்து, துப்பாக்கி சட்டங்களை கடுமையாக சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நியூயார்க் நகரத்தில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பு 18லிருந்து 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 14ஆம் தேதியன்று நியூயார்க்கில் உள்ள பஃபலோ நகர சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது இளைஞர் ஒருவர் கவச உடை அணிந்து கொண்டு திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினார். அப்போது சூப்பர் மார்க்கெட்டில் பிறந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் சரியான நேரத்தில் இதை தடுத்து நிறுத்தியதால் பல உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன, ஆனாலும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 10 ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பலியாகினர். இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்திய பெய்டன் ஜென்ட்ரான் என்னும் 18 வயது இளைஞர், இந்தத் துப்பாக்கிச் சூடு கருப்பின சண்முகத்தை குறி வைத்து நடத்தப் பட்டது என்பதை பின்னர் ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துப்பாக்கி சட்டங்களை சீர் திருத்தி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது நியூயார்க் மாகாண கவர்னர் கேத்தி ஹோச்சுல் துப்பாக்கி சீர்திருத்த சட்டங்களின் தொகுப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். பஃபலோ நகரின் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த இனவெறி தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க நியூயோர்க் நகரில் துப்பாக்கி சட்டங்களில் சீர்திருத்தி துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பு 18லிருந்து 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் கவச உடை வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
