மத்திய அரசு நிதி மசோதாவில் திருத்தம் கொண்டுவருவது, புதிய ஊதிய குழு பரிந்துரைகளின் பலன்களை பழைய ஓய்வூதியதாரர்கள் பெற முடியாமல் போகக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். Amendment brought by the central government
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து, மக்களவையில் நிதி மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில் 35 திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இந்த நிதி மசோதா 2025ல் முக்கியமாக, ஊதியக்குழு புதிதாக அமைக்கப்படும் போது அதன் பலன்கள் ஏற்கனவே ஓய்வு பெற்ற ஓய்வூதியதார்களுக்கு பொருந்தாது என மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
மக்களவையில் நிறைவேறியிருக்கும் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால், 8ஆவது ஊதிய குழு பரிந்துரை அடிப்படையில் கிடைக்கக்கூடிய ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட பலன்கள் ஏற்கனவே ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கிடைக்காமல் போக வாய்ப்புகள் இருப்பதாக கூறி, இதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
அதாவது, இந்த திருத்தப்பட்ட மசோதா மூலம், எந்த தேதியில் இருந்து பலன்களை வழங்க வேண்டும் என்பதை அரசாங்கம் முடிவு செய்யும் என்றும், இந்த பே கமிஷன் அறிக்கை வந்த பின்னால் ஓய்வு பெறக்கூடியவர்களுக்கு மட்டும்தான் ஓய்வூதியம் உயரும் என்றும் மற்றவர்களுக்கு கிடையாது எனவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கேரள எம்.பி.பிரேமச்சந்திரன் மக்களவையிலேயே கேள்வி எழுப்பியிருக்கிறார். “நிதி மசோதாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய திருத்தம் பழைய மற்றும் புதிய ஓய்வு பெற்றவர்களுக்கு இடையே வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட சம்பளக் குழுவின் பரிந்துரைகளின் பலன்கள், பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்ட பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இது பழைய ஓய்வு பெற்றவர்களுக்கு சலுகைகளை இழக்கச் செய்யும்” என்று கூறியுள்ளார்.
இந்த சட்டத்திருத்தம் ஓய்வூதியதாரர்களுக்கு பேரிடியாய் வந்து விழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த திருத்தத்தை எதிர்த்து ஓய்வூதியதாரர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. Amendment brought by the central government
