வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் பங்கேற்க ராமதாஸ் இன்று (ஆகஸ்ட் 9) மாலை பூம்புகார் செல்லும் போது, அவர் காருக்கு பின்னால் ஆம்புலன்ஸ் ஒன்றும் செல்கிறது.
ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் இன்று மாமல்லபுரத்தில் பாமக பொதுகுழுவை அன்புமணி நடத்தி வருகிறார்.
ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மகளிர் மாநாடு நாளை (ஆகஸ்ட் 10) பூம்புகாரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ராமதாஸ் இன்று பிற்பகல் 3 மணியளவில் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து கார் மூலம் பூம்புகார் கிளம்புகிறார்.
இந்த நிலையில் மருத்துவர் ராமதாஸ் இல்லத்திற்கு சேலத்தில் இருந்து தனியார் மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் ஒன்று தைலாபுரம் தோட்டத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது.
ராமதாஸ் பூம்புகார் செல்லும் போது ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர், செவிலியர், மொபைல் lCU என அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் ஆம்புலன்ஸும் செல்கிறது.
ராமதாஸ் செல்லும் காருக்கு பின்னால் ஆம்புலன்ஸ் செல்லவுள்ளது. நேற்று உடல்நிலையை காரணம் காட்டி ராமதாஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகமல் காணொளி காட்சி மூலம் ஆஜராகியிருந்தார்.
அன்புமணிக்கும், ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் கடந்த சில நாட்களாகவே ராமதாஸ் மன அழுத்தத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
