அம்பேத்கர் பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை!

Published On:

| By Kavi

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். AmbedkarBirthday leaders Respect

நாடாளுமன்றத்தில் மரியாதை AmbedkarBirthday leaders Respect

அம்பேத்கரின் 135ஆவது பிறந்தநாளை முன்னிட்டு  நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கரின் முழு உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து காலை 9 மணியளவில்  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், பிரதமர் மோடியும் அம்பேத்கர் புகைப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை  செலுத்தினர். 

தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின் AmbedkarBirthday leaders Respect

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கா் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு தமிழக அரசின் சாா்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  அம்பேத்கர் சிலைக்கு மலர்த்தூவிய முதல்வர் ஸ்டாலின் சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றார்.  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்,  விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். 

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 

சேலம் மாவட்டம் மரவனேரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து கட்சி தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ AmbedkarBirthday leaders Respect

சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி

தைலாபுரத்தில் உள்ள  அம்பேத்கர் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸும், சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அன்புமணி ராமதாஸும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அமமுக பொதுச்செயலாளர்AmbedkarBirthday leaders Respect

ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டவத்தில் அவரது உருவ சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தவெக தலைவர் விஜய் AmbedkarBirthday leaders Respect

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். வழக்கமாக பனையூர்  அலுவலத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு அவர்களது பிறந்தநாள் அல்லது நினைவு நாளுக்கு மரியாதை செலுத்தி வந்த விஜய் முதன்முறையாக வெளியில் வந்து அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share