அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்பீர் சிங்கை கண்டித்து அம்பாசமுத்திர வழக்கறிஞர்கள் சங்கம் இருநாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்தவர் பல்பீர் சிங், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகளின் பற்களைப் பிடுங்குவதாக அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.
இதனால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து நெல்லை மாவட்ட எஸ்.பி,யாக இருந்த சரவணன் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் பல்பீர் சிங்கை கண்டித்து அம்பாசமுத்திர வழக்கறிஞர்கள் சங்கம் இன்று (ஏப்ரல் 6) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பல்பீர் சிங்கின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள வழக்கறிஞர்கள், “இந்த சம்பவம் தொடர்பாக முறையான முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததைச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. விரைந்து விசாரணையை முடித்து குற்றம்சாட்டப்பட்டவரை பணிநீக்கம் செய்ய சங்கம் வலியுறுத்துகிறது,
அதோடு பல்பீர் சிங்கின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்றும் (6.4.2023), நாளை மறுநாளும் (8.4.2023) நீதிமன்ற பணிகளில் ஈடுபடப்போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரியா
முழுமையாக முடங்கிய நாடாளுமன்றம்: காங்கிரஸ் பேரணி!
குளத்தில் மூழ்கி 5 பேர் பலி: சட்டமன்றத்தில் வேண்டுகோள் வைத்த சேகர்பாபு
