ஜம்மு காஷ்மீரில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகை கோயில். இங்கு உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்ய குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இதனிடையே, கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி அமர்நாத் கோயில் வாரியத்தின் 44-வது ஆலோசனை கூட்டம், அம்மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடைபெற்றது. இதில் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை புனித யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆறு நாட்களாக நடைபெற்ற அமர்நாத் புனித யாத்திரை , அங்கு தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வானிலை சீரடைந்தபின் யாத்திரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால்தால் மற்றும் பஹல்காம் ஆகிய இரண்டு வழியாக மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரையில் கடந்த ஆறு நாட்களில் மொத்தம் 84,768 பக்தர்களும் நேற்று மட்டும் சுமார் 17, 202 பக்தர்களும் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு 3,65,000 பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு வருகை தந்த நிலையில் இந்த முறை 3,00,000 யாத்திரைக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டிஐஜி விஜயகுமார் தற்கொலை: முதல்வர் இரங்கல்!
”மஞ்சள் ஜெர்சியில் விரைவில் சந்திப்போம்”- ஜடேஜா வாழ்த்து!
ராகுல் தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு!
