இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துத் தயாராகியுள்ள ‘அமரன்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை(அக்.23) மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என அப்படகுழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த இந்திய ராணுவப் படை மேஜர் முகுந்த் வரதராஜனின் சுயசரிதையாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தின் நிகழ்வுகள் ஷிவ் அரூர் & ராகுல் சிங் எழுதிய ‘இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்( India’s most fearless ) ‘ என்கிற புத்தகத்தின் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது.
மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடிக்க, அவரது மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.
இந்திய அரசால் அசோக சக்ரா விருது பெற்ற முகுந்த் வரதராஜனின் ராணுவ வாழ்க்கை, அதற்கு உத்வேகமாக இருந்த அவரது குடும்பப் பின்னணி, அவருக்கும் அவரது மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸுக்கும் இடையேயான காதல் உறவு என பலவற்றை இந்த ‘அமரன்’ திரைப்படம் பேசவுள்ளது.
இந்தப் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது. சமீபத்தில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜீவி.பிரகாஷ் இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகின.
சி.எச்.சாய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தின் படத்தொகுப்பு வேலைகளை கலைவாணன் மேற்கொண்டுள்ளார். சண்டை காட்சிகளை ஸ்டீபன் ரிட்சர்ட் படமாக்கியுள்ளார்.
இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் சேர்ந்து தயாரித்துள்ளது. ’அமரன்’ திரைப்படத்தோடு கவினின் ‘பிளடி பெக்கர்’, ஜெயம் ரவியின் ‘பிரதர்’ ஆகிய திரைப்படங்கள் தீபாவளி ரிலீஸாக வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://whatsapp.com/channel/0029Va9qXdF9xVJWumpP4T04
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குடையை ரெடியா வச்சுக்கோங்க மக்களே… கனமழை அலர்ட் கொடுத்த வானிலை மையம்!
நாடு தழுவிய வங்கி வேலை நிறுத்தம்: என்ன காரணம்?
பியூட்டி டிப்ஸ்: முடி இல்லாப் பிரச்சினைக்கு முடிவு இதோ…
ஹெல்த் டிப்ஸ்: அமர்ந்தபடியே வேலை செய்பவர்களா நீங்கள்… இதை அவசியம் படியுங்கள்!