தாயான அமலா பால்: வைரல் போட்டோ!

Published On:

| By Selvam

amala paul announces pregnancy

மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை அமலா பால். இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின் சில காரணத்தினால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

தொடர்ந்து படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வந்த அமலா பால், ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ADVERTISEMENT

கேரள மாநிலம் கொச்சியிலுள்ள விடுதியில் எளிமையான முறையில் அமலா பால் – ஜகத் தேசாய் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். அமலா பாலின் இந்த பதிவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

– கார்த்திக் ராஜா

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share