தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளது. இதற்கு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எதிர்ப்புத்தெரிவித்து வந்தனர்.
மேலும், அதிருப்தி தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சிகளில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று வடஆற்காடு மாவட்டத்தைச்சேர்ந்த, முன்னாள் எம்எல்ஏ., ஜீனத் சார்புதீன் உள்ளிட்ட பலரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்கள்.
இந்நிலையில், பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் ஆகியோர் நாளை தமிழகத்துக்கான டெல்லி பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் முன்னிலையில் கட்சியில் இணைகிறார்கள். இதற்காகவே முகுல் வாஸ்னிக் சென்னை வருகிறார். அதன்பிறகு, டெல்லி சென்று சோனியா, ராகுலைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.