ஜனநாயகனுக்கு சிக்கல் : “ஏ பாஜக அரசே!” என பொங்க மாட்டார் விஜய் – ஆளூர் ஷா நவாஸ் விமர்சனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

கரூரில் மாநில அரசு தொடாத போதும் “ஏ திமுக அரசே!” என்று பொங்குவார்; ஆனால், சென்சார் போர்டு மூலம் ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும் “ஏ பாஜக அரசே!” என்று பொங்க மாட்டார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ் விமர்சித்துள்ளார்.

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழை தணிக்கைக் குழு வழங்காததால் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு U/A சான்றிதழை உடனே வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ் தனது X பதிவில், “கிறிஸ்துமஸ் கேக் வெட்டுவார்; ஆனால், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கமாட்டார்.

ADVERTISEMENT

இப்தார் நோன்பு கஞ்சி குடிப்பார்; ஆனால், திருப்பரங்குன்றம் தர்கா குறிவைக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மாட்டார்.

காங்கிரஸ் கூட்டணியை விரும்புவார்; ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கத்தை எதிர்க்கமாட்டார்.

ADVERTISEMENT

கரூரில் மாநில அரசு இவரை தொடாத போதும், “ஏ திமுக அரசே!” என்று பொங்குவார்; ஆனால், சென்சார் போர்டு மூலம் ஜனநாயகனுக்கு சிக்கல் வந்தபோதும், “ஏ பாஜக அரசே!” என்று பொங்க மாட்டார்.

எனினும் அவருக்காக சிலர் பொங்குகிறார்கள்.

பொங்கலோ பொங்கல்! ” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share