ஆரோக்கியமான முறையில் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கான உணவு இது. உடலுக்குத் தேவையான மாவுச்சத்து, புரதம், கால்சியம் இதில் நிறைந்துள்ளதால் பசியைப் போக்கி, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரும். மதியம் வரை பசிக்காமல் திடமான உணவாக இருக்கும். எலும்புகள் உறுதி பெறும். குழந்தைகள் அடிக்கடி சாப்பிடலாம். பெரியவர்கள் வாரம் இருமுறை சாப்பிடலாம்.
என்ன தேவை? Aloo Paneer Recipe
பனீர் – 200 கிராம்
வேகவைத்து, தோல் நீக்கிய சிறிய உருளைக்கிழங்கு – 200 கிராம்
வேகவைத்த பச்சைப் பட்டாணி – 200 கிராம்
தோல் நீக்கித் துருவிய இஞ்சி – ஒரு அங்குல அளவுக்கு
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 5 – 6
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய், கொத்தமல்லி – தேவையான அளவு.
எப்படிச் செய்வது? Aloo Paneer Recipe
பனீரை சின்னச்சின்ன சதுரங்களாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடான பின் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன், பனீரைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கிய பட்டாணி, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்துக் கிளற வேண்டும். பின்னர், சீரகத் தூள், மிளகுத் தூளைத் தூவி, கிளறிவிட்டு அடுப்பை அணைக்க வேண்டும். பின், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழைகளை மேலே தூவ வேண்டும். இதை, காலை உணவாகவோ, மாலை சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம்.