விஜய் முதல்வர் வேட்பாளர்- கூட்டணி குறித்து முடிவெடுக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்!

Published On:

| By Kavi

தமிழக அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்த முக்கிய தீர்மானங்களை இன்று (டிசம்பர் 11)நிறைவேற்றியுள்ளது. அதில், கட்சியின் தலைவர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு கூட்டணி அமைக்க முன்வருபவர்களை வரவேற்பது என முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 11) நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் , மாநில நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், வெங்கட்ராமன், சிடிஆர் நிர்மல் குமார், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

யாருடன் கூட்டணி?

ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதிய தமிழகத்தைஉருவாக்க வேண்டும். அதற்காக விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு, அவரின் தலைமை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம். மேலும் கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க, தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

ADVERTISEMENT

கூட்டணி பேச்சுவார்த்தை குழு

தவெக சார்பில் “தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து விஜய் முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தேர்தல் வாக்குறுதிகள் குழு

இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க,தமிழக மக்களைக் காக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் “தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு” அமைக்கப்படுகிறது. இந்த குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து விஜய்யே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

வலிமையான பரப்புரை

அவதூறு பரப்பும் எதிரிகளின் அறைகூவல் பொய்களை தோலுரித்து, எதிரிகளை எதிர்கொண்டு தோற்கடிக்க, ஒரு வலிமையான பரப்புரையை முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share