டிஜிட்டல் திண்ணை: பாஜகவுடன் கூட்டணியா? பதறிய விஜய்.. குட்டையை குழப்பிய ஆதவ் அர்ஜூனா

Published On:

| By Minnambalam Desk

Aadhav Arjuna confused vijay shocked

வைஃபை ஆன் செய்ததும் தவெகவின் கூட்டணி குறித்த ஆலோசனைகள், ஆதவ் அர்ஜூனாவின் பிரஸ் மீட் தொடர்பான தகவல்கள் என அடுத்தடுத்து வந்து விழ, மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். Aadhav Arjuna confused vijay shocked

நடிகர் விஜய், திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் தவெக கூட்டணி என்பது ஓகேதான்… ஆனால், பாஜக இருக்கிறதே? என புதிர் கேள்வியைத்தான் மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார் என நாம் மின்னம்பலத்தில் மே 15-ஆம் எழுதி இருந்தோம்.

இதன் பின்னர், பாஜக மூத்த தலைவரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜகவுடன் கூட்டணி இல்லை என நடிகர் விஜய் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லையே என கொளுத்திப் போட்டிருந்தார். Aadhav Arjuna confused vijay shocked

தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கொள்கை எதிரி பாஜக மற்றும் மாநிலத்தில் அரசியல் எதிரி திமுகவுடன் கூட்டணி இல்லை என உறுதியாக தெரிவிக்கிறோம் என கூறியிருந்தார்.

தமிழிசையின் பேட்டியைத் தொடர்ந்து சில கிறிஸ்தவ அமைப்புகளும் விஜய்யை அணுகி, அதிமுக- பாஜக கூட்டணியில் இணையப் போகிறீர்களா? என்ற கேள்வியை முன்வைத்தனவாம்.

இந்த பின்னணியில் நடிகர் விஜய் தமது கட்சியின் மூத்த நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வக்பு சட்டம் எதிர்ப்பு குறித்து தொடர்ந்து பேச வேண்டும். இதற்காக கேரளா அரசைப் போல தமிழ்நாடு அரசும் வக்பு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஒரு பிரஸ் மீட் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

அப்போது ஆதவ் அர்ஜூனா, வக்பு விவகாரத்துடன் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்கிற நிர்மல் குமாரின் பேட்டி, முழுமையான விளக்கமானதாக இல்லை, அதையும் சேர்த்து பிரஸ் மீட்டில் சொல்வோம் என்கிற கருத்தை முன்வைக்க விஜய்யும் ஓகே சொன்னாராம்.

இதற்காகத்தான் ஆதவ் அர்ஜூனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த பிரஸ் மீட்டின் தொடக்கத்தில், ஆதவ் அர்ஜூனா வக்பு வாரிய சட்டம் தொடர்பாகவும் கேரளாவைப் போல தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் விளக்கமாகத்தான் பேசினார்.

இதன் பின்னர் பிரஸ் மீட் முழுவதும் தவெகவின் கூட்டணி பற்றியதாகவே இருந்தது. இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜூனாவும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை விவரித்த கையோடு, அதிமுகவுடனான தவெக கூட்டணி ‘இயற்கையானது’ என நியாயப்படுத்துகிற வகையில் நீண்டநேரம் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். அதிமுகவுடன் தவெக கூட்டணியா என்ற கேள்விக்கும் கூட, அப்படி எல்லாம் இல்லை என மறுக்காமல் கற்பனைகளுக்கு பதில் சொல்ல முடியாது என மழுப்பினார் ஆதவ் அர்ஜூனா. Aadhav Arjuna confused vijay shocked

ஆதவ் அர்ஜூனாவின் இன்றைய செய்தியாளர் சந்திப்பு என்பது, பாஜகவுடன் தவெக கூட்டணி கிடையாது என்பதை உறுதி செய்திருந்தாலும் பாஜகவிடம் இருந்து விலகும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமையும் என்பதை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது.

Aadhav Arjuna asks why vijay oppose aiadmk

ஆனால், நடிகர் விஜய்யைப் பொறுத்தவரையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என்கிற நிலைப்பாட்டில் இருக்கிறார். ஆதவ் அர்ஜூனா தமக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி அதிமுக – தவெக கூட்டணியை உருவாக்க முயற்சிக்கிறார் என்பதையே இன்றைய பிரஸ் மீட் வெளிப்படுத்தி இருந்ததாக தவெக மேலிட நிர்வாகிகள் ஆதங்கப்படுகின்றனராம்.

அத்துடன், கூட்டணியில் இருந்து அதிமுக கடைசி நேரத்தில் வெளியேறும். அதிமுக + தவெக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கிறது என பாஜக சந்தேகிப்பதாக நாம் மின்னம்பலத்தில் எழுதி இருந்ததையும் உறுதிப்படுத்தும் வகையிலேயே ஆதவ் ஆர்ஜூனாவின் இன்றைய பிரஸ் மீட் இருந்ததாக டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை அழுத்தி ஆஃப் லைன் மோடுக்கு போனது வாட்ஸ் அப். Aadhav Arjuna confused vijay shocked

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share