ரஷ்யாவில் இருந்து உக்ரைன் திரும்பிய குழந்தைகள்!

Published On:

| By Kavi

போரின்போது ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீண்டும் உக்ரைன் திரும்பியுள்ளனர்.

உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த போரின்போது உக்ரைனில் இருந்து 19,000-க்கும் அதிகமான குழந்தைகளை ரஷ்யா தங்களது நாட்டுக்கு கடத்தியதாகவும், அதில் 328 குழந்தைகள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என்றும் ரஷ்யா மீது உக்ரைன் குற்றம் சாட்டியது.

இதை மறுத்த ரஷ்யா போரில் இருந்து பாதுகாப்பதற்காகவே குழந்தைகளை அழைத்து சென்றதாகக் கூறியது.

இதற்கிடையே குழந்தைகளை கடத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் போரில் காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடித்து பெற்றோரிடம் சேர்ப்பதற்காக `ரீயூனைட் உக்ரைன்‘ என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி போரால் பிரிந்த குடும்பங்களை இணைக்க உதவிகரமாக இருக்கும் என உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Alleged deported Ukraine children returned from Russia

இந்த நிலையில் போரின்போது ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீண்டும் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களை பெற்றோர்கள் கண்ணீருடன் வரவேற்றனர்.

தற்போது 30-க்கும் அதிகமான குழந்தைகள் நாடு திரும்பிய நிலையில், மேலும் பல குழந்தைகளை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. உக்ரைனுக்குத் திரும்பி வந்த குழந்தைகளில் சிலர் தாங்கள் ரஷ்ய முகாமில் விலங்குகளைப் போல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ராஜ்

பல் பிடுங்கிய ஏஎஸ்பி: அமுதா ஐஏஎஸ் நாளை விசாரணை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: கிரேப் ஸ்குவாஷ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share