ஒண்டி வீரன் நினைவுநாள்: தலைவர்கள் மரியாதை!

Published On:

| By christopher

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில்  அவரது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று (ஆகஸ்ட் 20) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக அரசு சார்பில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாநில, மாவட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஒண்டிவீரன் நினைவு நாளுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் பிரமுகர்கள் நெல்லைக்கு வருகை தந்ததையொட்டி நெல்லை மாநகரில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

’இந்தியாவுக்கும் விடியல் பெற்று தர வேண்டும்’ : முதல்வர் ஸ்டாலின்

நீலப் பொருளாதாரத்தை உயர்த்தும் அமைச்சர் எ.வ. வேலு- குஜராத்தில் எதிரொலித்த தமிழ்நாட்டின் பெருமை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share