தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாளை (மார்ச் 5) தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. All-party meeting
மக்களவை தொகுதி சீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக பாஜக அறிவித்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் உரிமைக்காக கட்டாயம் அனைவரும் வந்து தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்தார்.
இந்த கூட்டத்தில்,
திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாராதி, மூத்த வழக்கறிஞர் வில்சன்,
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கறிஞர் இன்பதுரை,
காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ் குமார்
விடுதலை சிறுத்தைகள் – விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் பொதுச் செயலாளர் ரவிக்குமார்
இந்திய கம்யூனிஸ்ட் – மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாநிலச் செயலாளர் சண்முகம், திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம்,
மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கவுரவ தலைவர் ஜிகே மணி
தேமுதிக சார்பில் துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி மற்றும் அவைத் தலைவர் இளங்கோவன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர். All-party meeting