“ஒரு சதவிகிதத்த கூட குறைய விட்றாதீங்க” : ஸ்டாலினுக்கு ஆதரவு தந்த தலைவர்கள்!

Published On:

| By Kavi

all party meeting leaders supported

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று (மார்ச் 5) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. all party meeting leaders supported

இதில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் வருகைத் தந்த போது வாசலில் நின்று அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் வரவேற்றனர்.

இந்த கூட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது:

திராவிடர் கழகம் – வீரமணி all party meeting leaders supported

தமிழ்நாட்டின் நலனை  பாதுகாக்க தவறவிட்டோம் என்பதை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சிகள் உணர வேண்டும்.

தொகுதி மறுவரை செய்தால் நாம் 8 தொகுதிகளை இழக்க நேரிடும்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் பிரதமர் சொல்லிவிட்டார், உள்துறை அமைச்சர் சொல்லிவிட்டார் என்று கூறுகிறார்கள். பாஜகவினர் பாதியை மறைக்கின்றனர்,மீதியை மறுக்கின்றனர்.

பாஜகவிற்கு சொந்தமாக முடிவெடுக்கும் தன்மை கிடையாது.

பாஜகவின் முடிவுகளை ஆர் எஸ் எஸ் தான் எடுக்கும்.

தமிழக வெற்றிக் கழக பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த்

தொகுதி மறு சீரமைப்பு தென் மாநிலங்களில் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும்.

தொகுதி மறு சீரமைப்பு என்பது தேவையற்றது தற்போது இருக்கும் 543 நாடாளுமன்ற தொகுதியே தொடர வேண்டும்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் – ஜான் பாண்டியன்

அடுத்த ஆண்டு நடைபெறுவதாக சொல்லப்படும் தொகுதி மறுசீரமைப்பில் நமக்கான விகிதாச்சாரம் 7.18 விட குறைய கூடாது.

தொகுதி மறு சீரமைப்பு மேற்கொள்வதற்கு அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு உருவாக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள ஏழு தனித் தொகுதிகள் வட மாவட்டங்களில் அமைந்துள்ளது.

ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை தனி தொகுதிகளாக அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் பழங்குடியினர் ஒருவர் கூட பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவில்லை.

தமிழ்நாட்டின் மக்களை காப்பதற்காக மறு சீரமைப்பு என்ற பெயரில் மக்களை அடக்க நினைத்தாலும் இங்கு இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை முடக்க நினைத்தாலும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து போராடும்.

அனைத்துக் கட்சிகளிலும் கருத்து வேறுபாடு இருந்தாலும் தமிழக மக்களை காப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும்.

முக்குலத்தோர் புலிப்படை தலைவர்- கருணாஸ்

அரசியல் என்பதும் ஒன்றிய ஆட்சி என்பதும் யாருக்கானது? மக்களுக்கானது, மக்கள் பேசும் மொழிக்கானது.அவர்கள் வசிக்கும் மண்ணுக்கானது.

இவை அனைத்தையும் பறிப்பதற்கும், அழிப்பதற்கும் முன்னோட்டமாக நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு திட்டத்தை முக்குலத்தோர் புலிப்படை பார்க்கிறது.

தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

தொகுதி மறுசீரமைப்பு அமைந்து விடக்கூடாது. மக்கள் மத்தியில் இந்த பிரச்சனை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைப்பதில் முழுமையாக முக்குலத்தோர் புலிப்படை பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சி பாரதம் – ஜெகன் மூர்த்தி all party meeting leaders supported

தொகுதி மறுவரையறை செய்யும் திட்டத்தை புரட்சி பாரதம் எதிர்க்கிறது.

உடனடியாக தொகுதி மறுவரையறை செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

கடந்த 55 ஆண்டுகளாக தென் மாநிலங்களில் உள்ள மக்கள் தொகையை விட வடமாநிலங்களில் மக்கள் தொகை அதிகம்.

வடமாநில மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் அதிக  மக்களவை தொகுதிகளை பெற்று மத்தியில் ஆட்சியை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. தொகுதி மறுவரையறை செய்யும்போது பட்டியல் இனத்தவருக்கான தனித்தொகுதிகள் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களை கொடுமைப்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுத்தப்படுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன்

543 தொகுதிகள் மாறி 848 தொகுதிகளாக மாறப்போகிறது என்று சொல்கிறார்கள்.

848 தொகுதிகளில் 7.18 சதவீதத்தை தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும்.

543 தொகுதியில் என்ன சதவீதம் நமக்கு உள்ளதோ அதே விகிதம் தற்போதும் கொடுக்க வேண்டும்.

இது தென் மாநிலங்களுக்கான பிரச்சனை அல்ல இது இந்தியா முழுவதுமான பிரச்சனை.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்த பிரச்சனையை தேசிய பிரச்சனையாக முன்எடுக்க வேண்டும். all party meeting leaders supported

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share