அனைத்துக் கட்சிக் கூட்டம்: ஸ்டாலினுக்கு அன்புமணி, திருமா வைத்த முக்கியக் கோரிக்கை! தலைவர்கள் பேசியது என்ன?

Published On:

| By Aara

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம்  இன்று (மார்ச் 5) சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10 மணியளவில் தொடங்கியது. All party meeting leaders speech

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறை செய்யப்பட்டால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படும் என்ற நிலையில், இந்த கூட்டம் கூட்டப்பட்டது.

அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு  63 கட்சிகள் அழைக்கப்பட்ட நிலையில் 58 கட்சிகள் பங்கேற்றுள்ளன. நாம் தமிழர், பாஜக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

இதில் பேசிய கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை முன் வைத்தனர். முதல் கட்ட தகவல் அடிப்படையில் கட்சியின் தலைவர்கள் பேசிய பேச்சின் சாராம்சம் இதோ…

ஜெயக்குமார் (அமைப்புச் செயலாளர் அதிமுக)

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் 7.2% என்ற தற்போதைய பிரதிநிதித்துவம் குறைக்கப்படக் கூடாது என்று தீர்மானத்தில் சேர்க்க வேண்டும். முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கிறது.

அன்புமணி பாமக தலைவர்

தொகுதி மறு சீரமைப்பு பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்திடவும், அடுத்தடுத்த போராட்ட செயல் திட்டங்களை வகுக்கவும் நமது  முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு நேரில் சென்று ஒருங்கிணைக்க வேண்டும். அதேபோல, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமாவளவன், விசிக தலைவர்

தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய  கூட்டு நடவடிக்கை குழுவை விசிக வரவேற்கிறது. இது தொடர்பான அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் விசிக முழு ஆதரவளிக்கும். தொகுதி மறுவரையறையில் தலித், சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கத் திட்டமிடுகிறார்கள். அப்படிப்பட்ட  நடவடிக்கை இருக்கக் கூடாது

முத்தரசன், மாநிலச் செயலாளர் சி.பி.ஐ.

ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மர்மமாக உள்ளன, வெளிப்படைத் தன்மையோடு செயல்பாடுகள் அமைய வேண்டும். All party meeting leaders speech

ஜவாஹிருல்லா, மமக

Pro rata என்ற வரையறையில் குழப்பம் இருக்கிறது. நம் மாநில எம்.பி எண்ணிக்கை குறையவில்லை என்பது பிரச்சனையில்லை; வடமாநிலங்களில் அதிகரிக்கப்பட்டால் அது பிரச்சனை.

ஈஸ்வரன், பொதுச் செயலாளர் கொமதேக

தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7.2 சதவிகிதம் என்ற எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. All party meeting leaders speech

கூட்டத்தில் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share