பயங்கரவாதத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஒருமித்த குரலில் எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 29 பேர் உயிரிழந்தனர். meeeting decision in pahalgam attack
இதற்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தி ரெசிரெண்ட் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்தசூழலில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது.
இந்தநிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி இன்று (ஏப்ரல் 24) மாலை தொடங்கிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், முதலில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே , சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளோம். பயங்கரவாதத்துக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு எதிர்க்கட்சி ஆதரவு தரும்” என்று கூறினார்.
திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான திருச்சி சிவா கூறுகையில், “தீவிரவாத தாக்குதல்கள் எதிர்காலத்தில் நம் நாட்டில் நடக்கக்கூடாது. பயங்கரவாதத்தை ஒழிக்க அரசாங்கம் எடுக்கும் உறுதியான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை திமுக ஆதரிக்கும்” என தெரிவித்தார்.
இதுபோன்று இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகள், பயங்கரவாதத்திற்கு எதிராக அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு ஆதரவு தருகிறோம் என்று உறுதியளித்துள்ளன.
meeeting decision in pahalgam attack
