கடந்த 5 ஆண்டுகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன அனைத்து பாலிவுட் படங்களும் போர் அடிக்கும் படங்கள் தான் என இயக்குநர் பால்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், ‘ கடந்த 4 – 5 ஆண்டுகளில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் அனைத்துமே மோசமான படங்களே.
இதை கலை ரீதியான, அல்லது அறிவுசார்ந்த பார்வை கொண்டு கூறவில்லை. முன் போல் நல்ல பொழுதுபோக்கிற்கும் சமீபத்திய படங்களில் வாய்ப்புகள் இல்லை. முன் போல் சுவாரஸ்யமான பிளாக்பஸ்டர் படங்களை தற்போது காண முடிவதில்லை.
தற்போது படங்கள் ‘பிராஜக்ட்’ ஆக பார்க்கப்படுகிறது. அதைச் சுற்றி ஒரு பெரிய பொருளாதரமே உள்ளது. போட்ட காசை திருப்பி எடுக்க வேண்டும். அதற்கான மார்கெட்டிங் வேலைகளை மட்டுமே சமீபத்திய படங்களில் செய்து வருகின்றனர். மக்களிடம் மார்கெட்டிங் செய்கின்றனர், அவ்வளவே. மக்களை பார்க்க வைத்துவிட்டால் போதும், படம் நன்றாக உள்ளதா..? இல்லையா..?என்பது அவசியம் இல்லை.
அந்தப் படம் அதற்கான வசூலை ஈட்டிவிடும்’ எனப் பேசியுள்ளார். பாலிவுட்டில் ‘பா’, ‘பேட் மேன்’, ‘சீனிகம்’, ‘ஷமிதாப்’ போன்ற படங்களை இயக்கியவர் பால்கி. கடைசியாக அவரது இயக்கத்தில் அபிஷேக் பச்சன், சையமி கேர் நடிப்பில் வெளியான ‘கூமர்’ திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
’காதலிக்க நேரமில்லை’ : முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிவது உறுதியா ? – நீதிமன்றத்தில் ஆஜரான பின்னணி!
