அட்சய திருதியை முன்னிட்டு இன்று (மே 10) ஒரேநாளில் இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு அட்சய திருதியை இன்று அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கியது. தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை அட்சய திருதியை எனப்படுகிறது.
இந்த நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது.
இந்தநிலையில் இன்று அதிகாலையிலேயே சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,705க்கும், சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து, ரூ.53,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்துள்ளது.
அட்சய திருதியை நாளான இன்று காலையில் ஏற்கனவே தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்த நிலையில், தற்போது மேலும் ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.720 உயர்ந்துள்ளது அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்க திட்டமிட்டுள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!