தனது குடும்ப பெயரை பயன்படுத்தி ஒரு நபர் மோசடியில் ஈடுபடுகிறார் என்று நடிகையும் கமல்ஹாசனின் மகளுமான அக்ஷராஹாசன் கூறியுள்ளார். Aksharahassan warn to her fans
தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் பிசியாக இருப்பவர் அக்ஷராஹாசன்.இவர், தனது பெயரையும் தனது குடும்ப பெயரையும் பயன்படுத்தி ஒரு நபர் மோசடி செய்வதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அக்ஷரா நேற்று (ஜூன் 5) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” திரையுலகைச் சேர்ந்த எனது சக நண்பர்களுக்கு ஒரு முக்கியமான தகவல்.
எனது பெயரையும், எனது குடும்ப பெயரையும் தவறாகப் பயன்படுத்தி, ஊட்டியில் அலுவலகம் வைத்துக்கொண்டு திரைப்படத் தயாரிப்புப் பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருவதாக இப்ராஹிம் அக்தர் என்ற நபர் கூறி வருகிறார்.
இது முற்றிலும் தவறானது.. அவருக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இந்த மோசடியாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான சட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். தயவுசெய்து அவரிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள். அவரை தொடர்பு கொள்ளவோ ஊக்குவிக்கவோ வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.