மும்பை ஜியோ உலக வர்த்தக வளாகத்தில் நடந்த தொழில்நுட்ப வார விழாவில் கலந்து கொண்டு ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி கலந்துரையாடினார்.
அப்போது, அவர் கூறியதாவது, “எனது தந்தை 40 ஆண்டுகளாக தொழில்துறையில் இருக்கிறார். இப்போதும், இரவு 2 மணி வரை இமெயில்கள் அனுப்பி கொண்டிருப்பார். இதுதான் எனது தந்தையிடம் இருந்து நான் கற்று கொண்டது. இப்போதும், நான் 12 மணி நேரம் வேலை பார்க்கிறேன். இதற்கு, எனது மனைவி உறுதுணையாக இருக்கிறார். அதைவிட, நேரம் பார்த்து நான் வேலை பார்ப்பதில்லை. வேலையின் தன்மையை அறிந்து வேலை செய்பவன். Akash Ambani talks about AI
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பல மடங்கு அதிகரிக்கும் தன்மை கொண்ட ஒரு இயந்திரம் ஏ.ஐ. பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றல் ஏ.ஐ-க்கு உண்டு. சர்வதேச உலகில் இந்தியாவை ஏஐ குருவாக மாற்ற மூன்று துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் திறமை ஆகியவற்றில் நமது கவனம் இருக்க வேண்டும். கோடிக்கணக்கான பயனர்களுக்கு சேவை செய்யக்கூடிய AI உள்கட்டமைப்பு மற்றும் தரவு மையங்களில் நாம் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
ஜியோ ஏற்கனவே அதைச் செய்து கொண்டிருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவில் ஆயிரம் விஞ்ஞானிகள், இன்ஜீனியர்ஸ், ஆராய்ச்சியாளர்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்காக பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஜாம்நகரில் அமையவுள்ள ஒரு ஜிகாவாட் திறன் கொண்ட டேட்டா சென்டர் நமது நாட்டில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் முன்னோடியாக அமையும்” என்று தெரிவித்தார்.“