நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் இணையும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
காவல் நிலையத்தில் மன்சூர்… இன்றே ஆஜரானது ஏன்?
