சுற்றுலா நிறுவனத்தை ஆரம்பித்த நடிகர் அஜித்

Published On:

| By Monisha

Ak moto ride motorcycle touring company

இருச்சக்கர பயணம் மேற்கொள்பவர்களுக்காக ‘ஏகே மோட்டோ ரைடு’ என்ற சுற்றுலா நிறுவனத்தை ஆரம்பித்துள்ளதாக நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் அஜித்குமார், இருச்சக்கர வாகன பயணங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் ஒரு மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை ஆரம்பித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா இன்று (மே 22) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“’வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்’. இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன்.

மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்பயணங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும்.

பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும்.

தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள். வாழு வாழ விடு – அஜித்குமார்” குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கண்ட அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தியினை பகிர்ந்து வருகின்றனர்.

மோனிஷா

எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை மையம் தகவல்!

’ஜீரோ டிராஃபிக்’: கமிஷனரிடம் கோரிக்கை வைத்த சித்தராமையா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share