அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அஜித் தற்போது தன்னுடைய 62-வது படமான விடாமுயற்சியில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் விடாமுயற்சியில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா, பிரணவ் மோகன்லால் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு விட்டதாகவும், கடைசிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
படம் அறிவித்ததில் இருந்து பெரிதாக எந்தவொரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. கடந்த ஒரு மாத காலமாகத்தான் அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
பொங்கலுக்கு கூட படத்தின் அப்டேட் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் வருத்தம் அடைந்திருந்தனர். தற்போது அவர்களின் வருத்தத்தினை போக்கும் விதமாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதன்படி படத்தின் பர்ஸ்ட் லுக் பிப்ரவரி மாதத்தின் கடைசியில் வெளியாகும் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
விரைவில் விடாமுயற்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…