அஜித்தின் 32 ஆண்டு கால ‘நாயக’ பயணம்!

Published On:

| By uthay Padagalingam

Ajiths 32-years journey as a hero

ஆலமரமாக இருந்தாலும், அதன் தொடக்கம் ‘விதை’ நிலையிலேயே அமையும். ‘இது இப்படி வளருமா’ என்ற கேள்வியை எந்த விதையைப் பார்த்தும் நாம் கேட்டுவிட முடியுமா? கிட்டத்தட்ட அப்படியொரு சூழலைத் தனது முதல் படமான ‘அமராவதி’யில் எதிர்கொண்டு, இன்று திரைத்துறையில் ஒரு விருட்சமாக வளர்ந்து நிற்பவர் அஜித்குமார்.

திரையுலகத்தில் நடிகராக வேண்டுமென்ற நோக்கத்துடன் நுழைந்தவர்கள் இசையமைப்பாளராக, இயக்குனராக, இதர துறைகளில் நிபுணராக மலர்ந்ததெல்லாம் வரலாறு. அதேபோல நடிகர்களாக, நடிகைகளாக ஜொலித்தவர்களும் கூட வர்த்தகம் உட்பட வேறு பலவற்றில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள். இன்றும் கூடத் திரையுலகில் பலர் அப்படி இருப்பதைக் காண முடியும். Ajiths 32-years journey as a hero

யார், எப்போது வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாததுதான் அதன் பின்னிருக்கிறது. அதனால், சில காரணங்களால் சிலரது பயணம் தடைபடும். சிலருக்குத் தடைபடும் வகையில் வேறு சிலர் காரணங்களாக இருப்பார்கள். அவற்றை மீறி வளர்ந்து வருபவர்களே, இன்று நாம் அண்ணாந்து பார்க்கிற நட்சத்திரங்களாகத் திகழ்கின்றனர்.

அவர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். ‘அமராவதி’யில் அறிமுகமாவதற்கு முன்னர் இவர் ரேஸ் பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டினார். அதனைச் சரி செய்கிற பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் விற்பனைப் பிரதிநிதியாகவும் வேலை செய்திருக்கிறார். Ajiths 32-years journey as a hero

அந்த காலகட்டத்தில், ‘நீங்க ஹீரோ மாதிரி இருக்கீங்களே’ என்ற பேச்சுகளை அஜித் நிறையவே கேட்டிருக்கிறார். அதுவே, அவரை மாடலிங் துறையில் ஈடுபடத் தூண்டியிருக்கிறது. இருபதுகளில் அத்துறையில் நுழையப் பாடுபட்டவர் சில விளம்பரப்படங்களில், புதிய தயாரிப்புகள் தொடர்பான குறும்படங்களில் நடித்திருக்கிறார்.

அதுவே, திரைப்படங்களில் நாயகனாக நடிப்பதற்கு வழிகாட்டியிருக்கிறது. பள்ளியில் அஜித்துடன் பயின்றவர் எஸ்.பி.சரண். அதனால், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடம் இவருக்கு அறிமுகம் உண்டு. அவர் சொல்லியனுப்ப, ‘பிரேம புஸ்தகம்’ படத்தின் இயக்குனரான ஸ்ரீனிவாஸின் தந்தை கொல்லப்புடி மாருதி ராவைச் சந்தித்திருக்கிறார். பிறகு, அந்த படத்தில் நாயகன் ஆனார். Ajiths 32-years journey as a hero

அந்த நேரத்தில்தான் ‘நீலாமாலா’ தொடர், ‘தலைவாசல்’ படங்களைத் தயாரித்த சோழா கிரியேஷன்ஸ் சார்பில் ‘அமராவதி’யை இயக்கத் தயாராகி வந்தார் செல்வா. முற்றிலும் புதுமுகங்களைத் தேடி வந்தவர், அஜித்தை சந்தித்ததுமே நாயகனாகத் தேர்வு செய்தார். இதில் நாயகியாக அறிமுகம் ஆனார் சங்கவி.

பாலமுருகனின் ஒளிப்பதிவு, கே.என்.ராஜுவின் படத்தொகுப்பு, பாலபாரதியின் இசை என்று தயாரான ‘அமராவதி’ ரசிகர்களுக்கு வித்தியாசமானதொரு திரையனுபவத்தைத் தந்தது.

முக்கியமாக, பாலபாரதி இசையமைத்த ‘தாஜ்மஹால் தேவையில்லை’, ’புத்தம் புது மலரே’ பாடல்கள் அப்போதைய இளைய தலைமுறையினரால் கொண்டாடப்பட்டன.

முதல் படமான ‘அமராவதி’யால் சில ரசிகர்களைக் கண்டெடுத்த அஜித், பிறகு ‘ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’ என்று ஒரு வெற்றிகரமான நாயகனாகப் பலரது ‘ஆதர்சம்’ ஆனார். Ajiths 32-years journey as a hero

நாட்டாமை, கோயம்புத்தூர் மாப்ளே, மன்னவா, பொற்காலம் உட்பட 80க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்த சங்கவியும் இந்த படத்தில் தான் அறிமுகம் ஆனார்.

ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு பருவத்தில் ஒவ்வொருவிதமான அழகோடு மிளிர்வார்கள். பழைய புகைப்பட ஆல்பங்களை புரட்டி பார்க்கையில் அதனை உணர முடியும். அந்த வகையில், அஜித் குமார் என்ற நட்சத்திரத்தின் 32 ஆண்டு கால திரைப்பயணம் எப்படி தொடங்கியது என்பதைச் சொல்லும் ‘அமராவதி’.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share