நடிகர் அஜித்குமாரின் 62வது படமான விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4 தேதி அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியுள்ளது. விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு தான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.
விடாமுயற்சி படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் 9 மாதங்களாக காத்துக் கொண்டிருந்த நிலையில்,
தற்போது இந்த படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியானதும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர்.
விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கின்றார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க, நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விடாமுயற்சி படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் அர்ஜுன் தாஸ் கமிட்டாகி இருந்தார்.
அதன் பிறகு சில காரணத்தினால் அர்ஜுன் தாஸுக்கு பதிலாக தற்போது பிக் பாஸ் ஆரவ் நடிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் நடிக்க இருந்த மற்றொரு நபரும் விலகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
விடாமுயற்சி படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிக்க இருந்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி தற்போது இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும், ஹூமா குரேஷிக்கு பதிலாக நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏன் இந்த திடீர் மாற்றம் என்று தெரியவில்லை. ஆனால் விடாமுயற்சியில் ரெஜினா நடிப்பது உறுதி என்று சொல்லப்படுகிறது.
இதுவரை வெளியான நடிகர்கள் பட்டியலில், நடிகை த்ரிஷாவை தவிர மற்ற அனைத்து நடிகர்களுக்குமே அஜித் குமாருடன் இணைந்து பணியாற்றும் முதல் படம் விடாமுயற்சி தான்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்ற தொகுதியை குறைக்க சதிச்செயல்: முதல்வர் ஸ்டாலின்
லோகேஷ் கனகராஜ் தடை செய்யப்பட வேண்டும்..! கொந்தளித்த கார்ட்டூனிஸ்ட்..!