வலிமை மோஷன் போஸ்டர் ரெடி… அஜித் வைத்த ட்விஸ்ட்!

Published On:

| By Balaji

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் கதறி வருகிறார்கள். இப்போது, வலிமை படம் குறித்த முக்கிய அப்டேட் கிடைத்திருக்கிறது.

போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டப் பார்வை படத்தைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணியில் உருவாகிவரும் படம் வலிமை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முக்கால் பாகத்துக்கு மேல் முடிந்துவிட்டது. இன்னும் 15 நாட்கள் ஷூட்டிங் மட்டுமே மீதமிருக்கிறது. அந்தப் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல இருக்கிறது படக்குழு. எப்படியும் ஏப்ரலில் வெளிநாட்டு ஷூட்டிங்கிற்குச் செல்வார்கள் என்று சொல்லப்படுகிறது. அங்கு முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கலந்த சண்டைக் காட்சிகளை படமாக்க இருக்கிறது படக்குழு.

ADVERTISEMENT

இதுவரை நடந்துமுடிந்திருக்கும் படப்பிடிப்புக்கான எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுவந்த படக்குழு, அதற்கான டப்பிங் பணிகளையும் தற்பொழுது

துவங்கியிருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் சென்னை வந்த போனிகபூர் வலிமை டீமுடன் ஒரு மீட்டிங் போட்டிருக்கிறார். அதில், வலிமை அப்டேட் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருப்பது பற்றி விவாதம் போயிருக்கிறது. அதன்படி, வலிமை மோஷன் போஸ்டரைத் தயார் செய்ய சொல்லியிருக்கிறார். அதன்படி, அட்டகாசமான வலிமை மோஷன் போஸ்டர் தயாராகிவிட்டதாம். இங்கு தான் ஒரு ட்விஸ்ட்…

ADVERTISEMENT

வலிமை மோஷன் போஸ்டரை அஜித்திடம் காட்டியிருக்கிறார்கள் படக்குழுவினர். அவர் பார்த்துவிட்டு, நன்றாக இருக்கிறது எடுத்துவையுங்கள் அப்புறம் போட்டுக் கொள்ளலாம் என்றிருக்கிறார். படக்குழுவுக்கே செம ஷாக். ஆகஸ்ட் மாதம் தான் படம் வெளியாக இருப்பதால், இப்போதே எதற்கு போஸ்டரெல்லாம் விடவேண்டும் என்கிற எண்ணத்தில் சொல்லியதாகத் தெரிகிறது. அதனால், இன்னும் கொஞ்ச காலம் வலிமை பட அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கத்தான் செய்ய வேண்டும்.

– தீரன்

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share