Vidaamuyarchi: இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?

Published On:

| By Manjula

விடாமுயற்சி படத்தின் கதை குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

ADVERTISEMENT

கடந்தாண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. டைட்டில் தவிர்த்து வேறு எந்த அப்டேட்டினையும் தயாரிப்பு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த விரக்தியில் இருந்தனர்.

ADVERTISEMENT

இதற்கிடையில் விடாமுயற்சி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டது. இனிமேல் தொடர வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விடாமுயற்சி படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்டார்.

அதில் அஜித்-ஆரவ் இருவரும் மயிரிழையில் தப்பிப்பிழைக்கும் காட்சிகள் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. இதையடுத்து இதுபோல ரிஸ்க் எடுத்து நடிக்க வேண்டாம் என, அவர்கள் அஜித்திற்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் விடாமுயற்சி படத்தின் கதை குறித்த விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளன. அதன்படி 1997-ம் ஆண்டு வெளியான பிரேக்டவுன் என்னும் ஹாலிவுட் படத்தின் தழுவலாக, இப்படம் உருவாகி வருகிறதாம்.

அப்படத்தில் ஹீரோ தன்னுடைய மனைவியுடன் நீண்ட கார் பயணம் ஒன்றை மேற்கொள்வார். இடையில் அவர்களை கார் ஒரு திகிலான பகுதியில் பிரேக்டவுன் ஆகி நின்றுவிடும். அப்போது அவரின் மனைவி காணாமல் போய்விடுவார்.

மனைவியை தேடிச்செல்லும் ஹீரோவுக்கு அதன் தொடர்ச்சியாக நடைபெறும் குற்றங்கள் தெரியவரும். அதற்குப்பிறகு அவர் என்ன செய்கிறார்? என்னும் கேள்விக்கான பதில் தான் மொத்த கதையுமாகும்.

இதை தழுவிதான் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தினை இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இதில் அஜித்தின் மனைவியாக திரிஷாவும் வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுன், ஆரவும் நடித்து வருவதாகத் தெரிகிறது.

என்றாலும் படம் திரையரங்குகளுக்கு வரும்போது தான் இது பிரேக்டவுன் படத்தின் தழுவலா? இல்லை மகிழ் திருமேனியின் சொந்த சரக்கா? என்பது தெரியவரும். எனவே நாம் அதுவரை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தற்போதைய நிலவரத்தின்படி விடாமுயற்சி படப்பிடிப்பு 6௦% முடிவுக்கு வந்துள்ளது. படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஏப்ரல் கடைசியில் தொடங்கவிருக்கிறது. விடாமுயற்சி படத்தினை தீபாவளிக்கு ரிலீஸ் செய்திட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மகளிருக்கு வருடம் 1 லட்சம் ரூபாய் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்!

IPL 2024: ‘வந்துட்டாப்ல வந்துட்டாப்ல’… கொண்டாட்டத்தில் மும்பை ரசிகர்கள்!

ஐ.பெரியசாமி மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 8-ல் விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share