நடிகர் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜூன் 30) வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படிப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், 70 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இந்த மாத இறுதிக்குள் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்றும் நடிகர் அர்ஜூன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், கடந்த ஜூன் 24-ஆம் தேதி விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை பகிர்ந்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் வலைதள பதிவில் பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையில், ஜூன் 27-ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இந்தநிலையில், விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. பாலைவனம் சூழ்ந்த தார்ச்சாலையில் நடிகர் அஜித், கையில் பையுடன் கூலிங் கிளாஸ் அணிந்து கூலாக நடந்து வரும் வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. இந்த போஸ்டரை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஒரே வாரத்தில் அஜித்தின் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு அப்டேட்டுகள் கிடைத்துள்ளதால், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி: எம்.ஜி.ஆர். திட்டமிட்ட 13% – அதிமுக வாக்குகளை குறிவைக்கும் ராமதாஸ்