Video: ‘நண்பன்’ வெற்றி துரைசாமியின் வீட்டுக்கு நேரில் சென்ற அஜித்

Published On:

| By Manjula

Ajith Kumar Vetri Duraisamy

வெற்றி துரைசாமியின் வீட்டிற்கு நடிகர் அஜித் நேரில் சென்று தன்னுடைய இரங்கலைத் தெரிவித்து இருக்கிறார்.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், இயக்குநருமான வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

கார் ஓட்டுநர் உடல் சடலமாகவும், உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடனும் மீட்கப்பட்ட நிலையில், வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் கிடைக்கவில்லை.

Ajith Kumar Vetri Duraisamy

கடந்த 8 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, 5 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் நேற்று (பிப்ரவரி 12) மீட்கப்பட்டது.

இந்த நிலையில் அவரது உடல் இன்று (பிப்ரவரி 13) சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு, கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக மனித நேய அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் நேரில் சென்று வெற்றி துரைசாமியின் குடும்பத்தினரிடம், தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் அஜித் மனைவி ஷாலினி, மேனேஜர் சுரேஷ் சந்திராவுடன் வெற்றி துரைசாமி வீட்டிற்கு நேரில் சென்று தன்னுடைய இரங்கலைத் தெரிவித்து இருக்கிறார்.

இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

முன்னதாக அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை வெற்றி துரைசாமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதோடு வெற்றி துரைசாமி திருமணத்திலும் அஜித் கலந்து கொண்டுள்ளார்.

இந்தியா முழுவதும் பைக் டிரிப் செல்லும் அளவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களாக, வெற்றி-அஜித் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அறிவாலயத்தின் தூண் சரிந்தது: துணை மேலாளர் ஜெயக்குமார் மரணம்!

ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்த ஜெ.பி.- திமுகவில் அதிர்வலைகள் ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share