ரீ ரிலீஸ்… கில்லி வழியில் பில்லா

Published On:

| By Selvam

நடிகர் அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு பில்லா திரைப்படம் மே 1-ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் திரைப்படங்கள் தற்போது அதிகளவில் வசூல் செய்து வருகின்றன. முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் , அஜித் ஆகியோரது திரைப்படங்கள் எதுவும் இந்த ஆண்டு வெளியாகாத நிலையில், அவர்கள் நடித்த பழைய படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்ததுள்ளது. அந்தவகையில், காதலர் தினத்தை முன்னிட்டு வாரணம் ஆயிரம், 3, சிவா மனசுல சக்தி, 96 உள்ளிட்ட படங்கள் வெளியானது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கு கை கொடுத்தது.

இந்தநிலையில், கடந்த வாரம் விஜய் நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த கில்லி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. கோடை விடுமுறை காரணமாக கில்லி திரைப்படத்தை திரையரங்கங்களில் ரசிகர்கள் குடும்பத்துடன் கண்டுகளித்தனர். இதனால், அனைத்து ஷோக்களும் ஹவுஸ் ஃபுல் ஆனது.

ரசிகர்கள் படம் முடிந்ததும் ஒன்ஸ் மோர் கேட்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. படம் வெளியாகி மூன்று நாட்களில் ரூ.15 கோடி வசூல் ஈட்டியது. இந்தநிலையில், நடிகர் விஜய்யை இயக்குனர் தரணி நேற்று சந்தித்து கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் கொண்டாடி வருவதற்கு நன்றி தெரிவித்தார்.

கில்லி பாணியை பின்பற்றி அஜித் நடித்து 2007-ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் அவரது பிறந்தநாளான  மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜிபி எண்டர்டெயின்மெண்ட்டின் அரவிந்த் சுரேஷ் குமார், டாக்டர் ஞானபாரதி ஆகியோர் ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பில்லா படத்தை வெளியிடுகின்றனர்.

பில்லா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்ற அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கில்லியை போல பில்லா படத்திற்கும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பதட்டத்துடன் வாக்களித்த விஜய்… காரணம் என்ன தெரியுமா?

ஆவணங்களை அமலாக்கத் துறைக்கு தர முடியாது : விஜயபாஸ்கர் வழக்கில் வாதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share