பொன்னியின் செல்வனில் விஜய், அஜித் – தகவல் பகிர்ந்த சினிமா தயாரிப்பாளர்!

Published On:

| By uthay Padagalingam

Ajith as Vandiya Thevan?

பிரபு இரட்டை வேடத்தில் நடித்த ‘சத்தியவாக்கு’ படத்தைத் தயாரித்தவர்கள் ராமவாசுதேவன் மற்றும் பாலகோபி. இருவருமே பஞ்சு அருணாசலத்தின் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகிகளாகப் பணியாற்றியவர்கள். அந்த படத்திற்குப் பிறகும் இருவரும் திரையுலகில் தயாரிப்பு நிர்வாகியாகவும் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தனர். Ajith as Vandiya Thevan?

திரையுலகில் ராம வாசு என்று அறியப்படுகிற ராமவாசுதேவன், திரைப்பிரபலமான சித்ரா லட்சுமணனின் யூடியூப் தளத்தில் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில் தனது கடந்த காலத் திரையுலக அனுபவங்களை விவரித்திருக்கிறார். Ajith as Vandiya Thevan?

அவரது பேச்சில் பல சம்பவங்கள் இரண்டொரு வரிகளாகவே வெளிப்பட்டன. அவை அனைத்துமே நாம் புருவம் உயர்த்த வைப்பதாக இருக்கின்றன. அவற்றில் ஒன்று, ‘வந்தியத்தேவன் பாத்திரத்தில் அஜித் நடிக்க இருந்தார்’ என்பது.

2000ஆவது ஆண்டுக்குப் பிறகு, தயாரிப்பாளர் காஜா மொய்தீன் தனது ரோஜா கம்பைன்ஸ் சார்பாக நடிகர் அஜித்தை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவெடுத்திருக்கிறார்.

காஜா மொய்தீன் நண்பரான ராம வாசு, அந்த புராஜக்டுக்காக மணிரத்னத்தைச் சந்தித்திருக்கிறார். அப்போது, அவரிடம் முழுமையாகப் பொன்னியின் செல்வன் கதையைத் தராமல் ‘வந்தியத்தேவன் பாத்திரத்தில் அஜித்தை நடிக்க வைக்கலாம்’ என்றிருக்கிறார் மணிரத்னம். அந்த பாத்திரத்தை வைத்து ஒரு படம் எடுக்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். Ajith as Vandiya Thevan?

இத்தகவலைக் கேட்டு காஜா மொய்தீனும் மகிழ்ச்சி அடைந்தாராம். ஆனாலும், இடையில் என்ன நிகழ்ந்தது என்று தெரியாமலேயே அந்த தயாரிப்பு திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது.

அதன்பின் 2015ஆம் ஆண்டு வாக்கில் ‘பொன்னியின் செல்வன்’ கதையை விஜய், மகேஷ்பாபுவைக் கொண்டு தயாரிக்க மணிரத்னம் திட்டமிட்டதும், அதற்கான முன்னேற்பாடுகள் பாதியில் நின்று போனதும் சினிமா ரசிகர்கள் அறிந்ததே.

அந்த நாவலை எம்ஜிஆர், கமல்ஹாசன் என்று பலரும் திரைப்படமாக்க முயன்றதும், மகேந்திரன் போன்ற இயக்குனர்கள் திரைக்கதை ஆக்கும் பணிகளில் ஈடுபட்டதும் தெரிந்த விஷயங்கள்.

இடையே, 2008 வாக்கில் தமிழ் திரை தொலைக்காட்சிக்காக ‘பொன்னியின் செல்வன்’ கதை ‘சீரியல்’ ஆகவும் முயற்சிகள் நடந்தன. நிக் ஆர்ட்ஸ் சார்பில் அதற்கான பணிகள் நடைபெற்றதாகத் தகவல் வந்தன.

இத்தனை முயற்சிகளுக்குப் பிறகுதான், இரண்டு பாகங்களாக 2022இல் வெளியானது மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’.

அதே பேட்டியில், காஜா மொய்தீனுக்காக இயக்குனர் ஷங்கரையும் சந்தித்ததைக் குறிப்பிட்டிருக்கிறார் ராம.வாசு. இம்முறையும் தமது தரப்பில் இருந்து அவர் நாயகனாக முன்வைத்த பெயர் அஜித் தான்.

‘அஜித்தே என் பெயரைக் குறிப்பிட்டாரா’ என்று கேட்டாராம் ஷங்கர். அதற்கு ‘இல்லை’ என்று பதில் சொல்லியிருக்கிறார் ராம.வாசு. ‘அவர் சொல்லி தவிர்த்தா நல்லாயிருக்காதுன்னு தான் கேட்டேன். இப்போதைக்கு முடியாது’ என்று அந்த வாய்ப்பைத் தவிர்த்துவிட்டாராம் ஷங்கர்.

அதன்பிறகே, ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ‘ஜனா’வில் நடித்திருக்கிறார் அஜித்.

ஒரு திரைப்படத்தின் கதையில், தயாரிப்பில், வெளியீட்டில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்ததைக் கேள்விப்பட்டிருப்போம். நட்சத்திரங்களின் திரைப்படங்களைப் பொறுத்தவரை, தயாரிப்புக்கு முன்னதாக நிகழ்ந்த விஷயங்கள் இது போன்று ஏராளம் இருக்கும்போல..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share