ADVERTISEMENT

மீண்டும் கார் ரேஸராக அஜித் : ஏகே ரேஸிங் அணியின் லோகோ வெளியானது!

Published On:

| By christopher

Ajith as a car racer again: AK Racing team logo released!

சர்வதேச கார் ரேஸில் களமிறங்கும் அஜித்குமார் ரேஸிங் அணியின் லோகோ இன்று (அக்டோபர் 22) வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமான நடிகர் அஜித்குமாருக்கு சினிமாவை தாண்டி கார் ரேஸிலும் மிகப்பெரிய ஆர்வம் என்பது அனைவரும் அறிந்ததே.

ADVERTISEMENT

அவர் ஏற்கெனவே 2004 ஃபார்முலா ஆசியா BMW F3 சாம்பியன்ஷிப் மற்றும் 2010 ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை, படப்பிடிப்பு என வலம் வந்த  அஜித், தற்போது மீண்டும் கார் ரேஸ் களத்திற்கு திரும்பியுள்ளார்.

ADVERTISEMENT

அதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற ஒரு அணியை உருவாக்கியுள்ளார். அவரது தலைமையிலான அந்த அணியில் பாபியன், மேத்யூ, கேம் மெக்லொட் என மூன்று கார் பந்தய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் அஜித்குமார் ரேஸிங் அணியின் லோகோ இன்று வெளியாகியுள்ளது. அதனுடன் அணியின் முழு விவரங்களும் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

Image

அதன்படி, துபாயில் ஜனவரி 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் PORSCHE 992 GT 3 பிரிவிலான ரேஸ் முதல் சுற்று போட்டியில் இந்த அணி பங்கேற்க உள்ளது.  தொடர்ந்து ஐரோப்பிய 24எச் சீரிஸ் சிஎச் சாம்பியன்ஷிப் தொடரிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளது.

இந்த அணிக்கான கார்களை தயார் செய்வது, பழுது பார்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பிரபல BAS KOTEAN RACING என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக விழுந்துவிடும் : எடப்பாடி பழனிசாமி

நாக சைதன்யா மீண்டும் திருமணம் : சோபிதா துலிபாலா மனைவி ஆகிறார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share