அஜித்தை வியக்க வைத்த கங்குவா.. AK 64 இயக்குநர் சிவா?

Published On:

| By Selvam

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து நடிகர் அஜித் குமாரின் படங்களை இயக்கி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தவர் இயக்குநர் சிறுத்தை சிவா.

விஸ்வாசம் படம் நடிகர் ரஜினிக்கு மிகவும் பிடித்து போக, அதன் பிறகு ரஜினியின் அண்ணாத்த படத்தை சிவா இயக்கினார். அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டியது.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து தற்போது சூர்யாவின் கங்குவா படத்தை சிவா இயக்கியுள்ளார். மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கங்குவா படத்தின் Glimpse வீடியோவை நடிகர் அஜித் பார்த்துள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.

ADVERTISEMENT

கங்குவா படத்தின் Glimpse வீடியோவை பார்த்த நடிகர் அஜித், சிவாவை மனமார வியந்து பாராட்டியுள்ளார் என்று தகவல் வெளியானது. விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களை தொடர்ந்து AK 64 படத்திற்காக சிவா உடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கங்குவா படத்தின் மொத்த பணிகளும் வரும் ஆகஸ்ட் மாதம் முழுமையாக முடிந்து விடும் என்றும், வரும் தீபாவளிக்கு கங்குவா படத்தை ரிலீஸ் செய்ய படக் குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுறது.

ADVERTISEMENT

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரீமால் புயல்: வானிலை மையம் வார்னிங்!

நாடாளுமன்றத் தேர்தல்: தமிழகத்தின் முழு வாக்குப்பதிவு விவரங்கள் இதோ!

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share