உளவியல் த்ரில்லர் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

Published On:

| By Kavi

இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான எண்டேமால் ஷைன் இந்தியா எனும் நிறுவனம், நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் தயாரிக்கும் படம் ‘ மாணிக்’.

இந்த படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார்.

ADVERTISEMENT

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இரண்டு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டுள்ளன.

உளவியல் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடிகை சம்யுக்தா சண்முகநாதன், நடிகர் விவேக் பிரசன்னா, குழந்தை நட்சத்திரங்கள் சாய் ஜனனி மற்றும் ஸ்வர் காம்ப்ளே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்தியில் வெளியான ‘லுடோ’, ‘ஜக்கா ஜாசூஸ்’ மற்றும் ‘சத்ரசல்’ ஆகிய படங்களின் கதாசிரியரான சாம்ராட் சக்கரவர்த்தி, இந்தப் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நைனிடாலில் தொடங்குகிறது. அடுத்த ஆண்டு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. 

ADVERTISEMENT

இராமானுஜம்

வாரிசு VS துணிவு : ரணகளமாகும் இணையம்!

இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share