கேன்ஸ் படவிழாவுக்கு முதன்முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய் நெற்றியில் திலகமிட்டு வந்தது ஆபரேஷன் சிந்தூரை நியாகப்படுத்தியுள்ளது. Aishwarya Rai remember An Operation Sindoor At Cannes
உலக திரைபிரபலங்கள் கலந்துகொள்ளும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸில் இந்தாண்டு கடந்த 13ஆம் தேதி தொடங்கியது.
இந்த விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து ஆவணப்படங்கள் உட்பட அனைத்து வகைகளின் புதிய படங்களும் பல்வேறு விருதுகளுக்காக திரையிடப்படும்.
இந்த நிகழ்வுக்கு பிரபலங்கள் பலரும் பிரபல ஆடை வடிவமைப்பாளர்களின் ஆடையை அணிந்து சிவம்பு கம்பளத்தில் நடந்துவருகிறது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அந்த வகையில், இந்திய திரையுலகைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், யானையின் தந்த நிற சேலை அணிந்து, கழுத்தில் சிவப்பு நிற மாணிக்க மணிகள் கோர்த்த உடையில் தோற்றி கவனம் ஈர்த்தார்.

எனினும் பார்வையாளர்கள் மத்தியில் பெரிதும் கவனம் ஈர்த்தது அவரது நெற்றி குங்குமம் தான். இது சமீபத்தில் பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட இந்தியா ராணுவத்தின் ஆபரேசன் சிந்தூரை கொண்டாடும் வகையில் இடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கணவர் அபிஷேக் பச்சன் உடனான விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராயின் இந்த உடையை பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா தயாரித்துள்ளார். கையால் நெய்யப்பட்ட கட்வா பனாரசி கைத்தறிப் புடவையான இந்த புடவையில் தந்தம் கலக்கப்பட்டுள்ளது.
மேலும் மனிஷ் மல்ஹோத்ரா ஜூவல்லரியின் உயர் நகைகளுடன் அதில் கோர்க்கப்பட்டுள்ளது. நெக்லஸில் 500 காரட் மொசாம்பிக் மாணிக்கங்கள் மற்றும் 18k தங்கத்தில் வெட்டப்படாத வைரங்கள் இடம்பெற்றிருந்தன.

வழக்கமாக கேன்ஸ் பட விழாவுக்கு கவுன் அணிந்து வந்து வருவார் ஐஸ்வர்யா ராய். இந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் சேலை மற்றும் நெற்றி குங்குமம் என உலகளவில் கவனம் ஈர்த்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.