கார் விபத்து… ஐஸ்வர்யா ராய்க்கு என்னாச்சு?

Published On:

| By Selvam

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடிகை ஐஸ்வர்யா ராயின் கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. aishwarya rai car hit

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஐஸ்வர்யா ராய். மும்பையில் நேற்று (மார்ச் 26) நடிகை ஐஸ்வர்ரா ராய் கார் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த பேருந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக ஐஸ்வர்யா ராயின் பாதுகாவலர்கள் மற்றும் டிராபிக் போலீஸ் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். இந்த விபத்தில் ஐஸ்வர்யா ராய் காயமடைந்ததாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பல ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்தநிலையில், கார் விபத்து நடந்தபோது ஐஸ்வர்யா ராய் காரில் இல்லை, அவர் தற்போது நலமாக இருக்கிறார் என்று இந்தியா டுடே ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும் ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா ராய் பாதுகாப்பாக இருக்க கடவுளை பிரார்த்திப்பதாக #Pray For Aishwarya Rai என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். aishwarya rai car hit

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share