சென்னையில் ஏர்டெல் 5ஜி சேவை!

Published On:

| By Minnambalam

சென்னையில் ஏர்டெல் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஐந்தாம் தலைமுறை தொலைத்தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

அதையடுத்து, தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் நான்கு நகரங்களில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. 

இந்த நிலையில், சென்னையில் ஏர்டெல் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, பெங்களூர், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் ஆகிய நகரங்களில்  5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், 5ஜி மொபைல் வைத்திருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அனைவரும், சிம் கார்டை மாற்றாமல், 4ஜி கட்டணத்திலேயே 5ஜி சேவையை பயன்படுத்தலாம். 

ADVERTISEMENT

இன்டர்நெட் வேகம் 30இல் இருந்து 40 மடங்கு வரை அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நகரங்களிலும் ஏர்டெல் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும். மக்கள் 5ஜி சேவைக்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளது. மேலும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் இந்தச் செய்தியைப் பகிர்ந்து வருகிறது.

-ராஜ்

கொண்டாட்டம் என்னுமொரு மதம்! – ஸ்ரீராம் சர்மா

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share