வாடிக்கையாளர்களின் தரவுகள் திருட்டா? ஏர்டெல் விளக்கம்!

Published On:

| By Selvam

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு நிறுவனமாக ஏர்டெல் உள்ளது. 38 கோடி மக்கள் ஏர்டெல் சிம்மை பயன்படுத்தி வருகிறார்கள்

இந்தநிலையில், ஏர்டெல் சிம் கார்டை பயன்படுத்தும் 37.5 கோடி வாடிக்கையாளர்களின் தரவுகள் ரூ.40 லட்சத்திற்கு விற்பனைக்கு தயாராக இருப்பதாக XenZen என்ற ஹேக்கர் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இதில் பயனர்களின் மொபைல் எண், இமெயில் முகவரி, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பெற்றோர் பெயர், ஆதார் கார்டு உள்ளிட்டவை போன்ற சென்சிட்டிவான விவரங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பு இந்தியா முழுவதும் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவனம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த செய்தி ஏர்டெல்லின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகும்.

ADVERTISEMENT

ஏர்டெல்லில் இதுபோன்ற தரவுகள் திருடப்படவில்லை என்பதை எங்களால் உறுதியாக கூற முடியும்” என்று தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியாவின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் மாதாந்திர தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணத்தை உயர்த்தியது இந்தியா முழுவதும் முக்கிய பேசுபொருளாக மாறியது.

இந்த சலசலப்புகள் அடங்குவதற்கும் ஏர்டெல்லில் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தினமும் 70 லட்சம் மதுபாட்டில்கள் விற்பனை : நீதிபதிகள் அதிர்ச்சி!

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி: தொகுதி வாரியாக எடப்பாடி ஆலோசனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share