ADVERTISEMENT

தீபாவளி எதிரொலி: விமானக் கட்டணங்கள் 6 மடங்கு வரை உயர்வு – பயணிகள் அதிர்ச்சி!

Published On:

| By Pandeeswari Gurusamy

Flight service between Covai to Singapore cancel

நாடு முழுவதும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, பண்டிகையை உறவினர்களுடன் கொண்டாடும் ஆவல் காரணமாக பலரும் சொந்த ஊர்களுக்கு செல்லத் தயாராகி வருகின்றனர்.

இந்த ஆண்டு சனி, ஞாயிறு என விடுமுறை நாட்களை தொடர்ந்து திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை வருவதால், இன்று முதல் வெளியூர் செல்ல லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர்.

ADVERTISEMENT

தீபாவளியை முன்னிட்டு ஏராளமான சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பலரும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஆம்னி பஸ்கள் மற்றும் விமானப் பயணங்களைத் தேர்வு செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக விமான டிக்கெட் விற்பனையும் களைகட்டி வருகிறது. சென்னை உள்நாட்டு விமான நிலையங்களில் விமானக் கட்டணங்கள் 5 முதல் 6 மடங்கு வரை உயர்ந்துள்ளன. இதனால் விமானப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
விமான டிக்கெட் கட்டண விபரங்கள்
  • தென்மாவட்டங்களைப் பொறுத்தவரையில் சென்னை – மதுரை சாதாரண நாள் கட்டணம் ரூ.3,129- லிருந்து ரூ.17,683க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 5.6 மடங்கு அதிகம்.
  • சென்னை – திருச்சி சாதாரண நாள் கட்டணம் ரூ.3,608-லிருந்து ரூ.15,233 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 4.2 மடங்கு அதிகம்.
  • சென்னை – தூத்துக்குடி சாதாரண நாள் கட்டணம் ரூ.3,608-லிருந்து ரூ.17,053 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 4.7 மடங்கு அதிகம்.
  • சென்னை – கோவை சாதாரண நாள் கட்டணம் ரூ.4,351-லிருந்து ரூ.17,158 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 3.9 மடங்கு அதிகம்.
  • சென்னையிலிருந்து தலைநகர் டெல்லிக்கு ரூ.5,933-லிருந்து ரூ.30,414 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 5.1 மடங்கு அதிகம்.
  • சென்னை – மும்பைக்கு ரூ.3,356-லிருந்து ரூ.21,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 6.5 மடங்கு அதிகம்.
  • சென்னை-கொல்கத்தாவுக்கு ரூ.5,293 -லிருந்து ரூ.22,169 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 4.2 மடங்கு அதிகம்.
  • சென்னை-ஹைதராபாத்துக்கு ரூ.2,926 -லிருந்து ரூ.15,309 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது 5.2 மடங்கு அதிகம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share