குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக டாடா குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது. air india flight accident
டாடா சன்ஸ் குழுமத் தலைரும், ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் குழுமம் வாங்கிய பிறகு அந்த விமான நிறுவனத்தின் தலைவராகவும் உள்ள என்.சந்திரசேகரன் இந்த விமான விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அகமதாபாத் – லண்டன் கட்விக் பகுதிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 171 இன்று (ஜூன் 12) ஒரு துயர விபத்தில் சிக்கியதை நான் ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறேன்.
பேரழிவு தரும் இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்பதே எங்களது முதன்மை நோக்கம்.
சம்பவ இடத்தில் அவசரகால மீட்புக் குழுக்களுக்கு உதவவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவை வழங்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.
விமானத்தில் பயணித்தவர்களை தேடும் அவர்களது குடும்பத்தினருக்காக ஆதரவு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. air india flight accident