அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 15 பக்கங்களை கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வு பணியகம் இன்று (ஜூலை12) வெளியிட்டுள்ளது. air india flight accident report hit shock waves
கடந்த ஜூன் 12-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 747 விமானம் அடுத்த சில நொடிகளிலேயே விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணித்த ஒரு பயணியைத் தவிர மொத்தம் 241 பேர் உட்பட 275 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்த விசாரணையின் ஒருபகுதியாக விமானத்தின் கருப்புப் பெட்டி டெல்லி ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதன் முதல்கட்ட அறிக்கையை நாடாளுமன்ற குழுவிடம் விமான விபத்து புலனாய்வு பணியகம் (AAIB) சமர்ப்பித்துள்ளது. தொடர்ந்து 15 பக்கங்கள் கொண்ட அறிக்கை இன்று வெளியானது.
அதில் எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்வது தடைபட்டதால்தான் விபத்து ஏற்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் விமானம் கிளம்பிய சில நொடிகளிலேயே இரண்டு இன்ஜின்களும் செயல்பாட்டை இழந்துள்ளன.
விமானம் கிளம்பிய அடுத்த நொடியிலேயே, இன்ஜினுக்குப் போக வேண்டிய எரிவாயு ‘RUN’-ல் இருந்து ‘CUTOFF’-க்கு சென்றுள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா விமான பைலட்கள் பேசிக்கொண்டது குரல் பதிவு மூலம் அம்பலமாகியுள்ளது.
காக்பிட் ஆடியோ பதிவில், ஒரு விமானி இன்னொரு விமானியிடம், ‘ஏன் அதை கட் ஆஃப் செய்தீர்கள்?’ என்று கேட்கிறார். அதற்கு இன்னொருவர், ‘நான் செய்யவில்லை’ என்று கூறியது பதிவாகியுள்ளது.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
