திருச்சியில் இருந்து இன்று (அக்டோபர் 11) மாலை ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்தது. பின்னர் அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் தரப்பில், “திருச்சி – ஷார்ஜா வழித்தடத்தில் இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்குவதில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து நாங்கள் அறிவோம்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்குவதற்காக எரிபொருளையும் எடையையும் குறைக்க விமானம் பலமுறை வானில் வட்டமடித்தது.
இதுதொடர்பாக முழுமையாக விசாரிக்கப்படும். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படுகிறது. பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம். தொடர்ந்து பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதில் எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திக் திக் நிமிடங்கள்… “ஹார்ட் பீட் அதிகமாக துடிக்கிறது” – திருச்சி விமானத்தில் பயணித்தவர் பேட்டி!