விமான விபத்து எதிரொலி… போயிங் நிறுவனத்திற்கு இத்தனை கோடி இழப்பா?

Published On:

| By Minnambalam Desk

air india crash

அமெரிக்காவின் முன்னணி விமான உற்பத்தி நிறுவனமான போயிங், இந்தியாவில் ஏற்பட்ட விமான விபத்திற்குப் பிறகு தனது பங்குகளில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. air india crash

இன்று (ஜூன் 12, 2025) குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளேயே திடீரென தரையில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. ட்ரீம்லைனர் வகை விமானம் விபத்தை சந்திப்பது இதுவே முதல்முறை.

ADVERTISEMENT

விமானத்தில் இருந்த 204 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தை தொடர்ந்து போயிங் நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ADVERTISEMENT

இதனால், அமெரிக்க பங்குச்சந்தையில் போயிங் பங்குகள் சுமார் 8% வீழ்ச்சியடைந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு பங்கின் விலை 197 டாலர் வரை விலை குறைந்தது.

இந்திய ரூபாய் மதிப்பில் போயிங் நிறுவனத்திற்கு 11 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் தாக்கம் நியூயார்க் பங்குச்சந்தையில் பரவலாகும் வகையில் Dow Jones மற்றும் Nasdaq ஆகியவற்றிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

இது போன்ற சம்பவங்கள் கடந்த 2018-19ஆம் ஆண்டுகளில் 737 Max விமானங்களுக்கு ஏற்பட்ட விபத்துகளை நினைவுபடுத்துவதாக விமான துறை விமர்சகர்கள் கூறுகின்றனர்.

போயிங் நிறுவனமும், இந்திய விமான பாதுகாப்புத் துறை மற்றும் அமெரிக்கா FAA-வும் இணைந்து விபத்துக்கான காரணங்களை விசாரித்து வருகின்றன.

போயிங் நிறுவனம், முழுமையான விசாரணை முடிவுகள் வரும்வரை தீர்மானங்களை எடுக்க முடியாது” என அறிவித்துள்ளது.

இந்த சம்பவம், உலகளவில் விமானப் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்புகிறது.

போயிங் நிறுவனம் தனது எதிர்கால வளர்ச்சி பாதையில் தொடர விரும்பினால், இந்த விசாரணையின் முடிவுகள் மற்றும் அதன் மீதான நடவடிக்கைகள் மிகவும் முக்கியமாக அமையக்கூடும். air india crash

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share