ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Published On:

| By Minnambalam Login1

air india bomb scare

மும்பையில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு இன்று(அக்டோபர் 14) அதிகாலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மற்றும் மும்பையிலிருந்து மஸ்கட் மற்றும் ஜெட்டாவுக்கு கிளம்பவிருந்த இரண்டு இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு இன்று அதிகாலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு(AI 119), கிளம்பிய சிறிது நேரத்திலேயே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதனால் விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.

ADVERTISEMENT

தற்போது இந்திரா காந்தி விமான நிலையத்தில், விமானத்தை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

அது போல், இன்று அதிகாலை 2 மணிக்கு மும்பையிலிருந்து ஓமன் நாட்டுத் தலைநகரம் மஸ்கட்டிற்கு இண்டிகோ விமானம் ஒன்று கிளம்பவிருந்தது. ஆனால் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், விமானம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் அது பொய் என்று தெரிந்தவுடன், அந்த விமானம் காலை 9 மணி அளவில் புறப்பட்டுச் சென்றது.

ADVERTISEMENT

மேலும் மும்பையிலிருந்து சவுதி அரேபியா ஜெட்டாவுக்கு கிளம்பவிருந்த மற்றொரு இண்டிகோ விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அந்த விமானத்தை அதிகாரிகள் தற்போது  சோதனை செய்து வருகிறார்கள்.

மூன்று விமானங்களுக்கு ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ADVERTISEMENT

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

சென்னையில் இன்று கனமழை பெய்யுமா? வெதர்மேன்’ பிரதீப் என்ன சொல்கிறார்?

வாரத்தின் முதல் நாள் தங்கம் விலை கூடியதா குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன?

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அட்டவணை வெளியிட்டார் அன்பில் மகேஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share