ஏர் இந்தியா விமானம் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி இன்று (ஜூன் 13) ஆய்வு மேற்கொண்டார். air india accident modi inspect
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று (ஜூன் 12) மேகானி நகரில் விபத்தில் சிக்கியது.
இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
பிரிட்டனைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே உலுக்கியுள்ள இந்த விபத்து தொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
அதில் ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில் பிரதமர் மோடி இன்று அகமதாபாத் வந்து விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். மீட்பு பணிகள் எவ்வாறு நடக்கிறது என்று கேட்டறிந்தார்.
அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர பாடெல், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
ஏற்கனவே உள்துறை அமைச்சர் விபத்து நடந்த பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு சென்றார்.
விபத்து நடந்த பகுதிகளில் இன்னும் மீட்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
குறிப்பாக விமானத்தின் கருப்பு பெட்டியை கைப்பற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த சூழலில் முழுமையான மீட்பு பணி முடியாமல் எவ்வளவு பேர் உயிரிழந்தார்கள் என்ற எண்ணிக்கையை தெரிவிக்க முடியாது என்று தேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரி ஹரியோம் காந்தி கூறியுள்ளார்.
மோப்ப நாய்கள், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். air india accident modi inspect
