மெட்ரோவில் அலைமோதும் கூட்டம்… பயண நேரத்தில் மாற்றம்!

Published On:

| By Selvam

விமான சாகச நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக, சென்னை வண்ணாரப்பேட்டை – டிஎம்எஸ் இடையே 3.5 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் இன்று (அக்டோபர் 6) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப் பார்ப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் திரண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் பலரும் சேப்பாக்கம் ரயில் நிலையம், ஓமந்தூரார் மெட்ரோ ரயில் மற்றும் பைக், கார் போன்ற வாகனங்களில் பயணித்து வருகின்றனர்.

கூட்ட நெரிசல் காரணமாக, சென்னை வண்ணாரப்பேட்டை – டிஎம்எஸ் இடையே 3.5 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வான் சாகச நிகழ்ச்சியின் காரணமக ஏற்பட்ட கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை வண்ணாரப்பேட்டை – டிஎம்எஸ் இடையே 3.5 நிமிட இடைவேளையில் மெட்ரோ இயக்கப்படும். விம்கோ நகர் – விமான நிலையம் இடையே 7 நிமிட இடைவேளையில் மெட்ரோ இயக்கப்படும்.

அதேபோல சென்ட்ரல் – பரங்கிமலை வரை வழக்கமாக 7 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.  மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கூட்ட நெரில் சீராகும் வரை மேற்கண்ட மாற்றங்கள் அமலில் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விமான நிகழ்ச்சி: கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்… திணறிய சென்னை

மெரினாவில் சிலிர்க்க வைத்த விமான சாகச நிகழ்ச்சி…. கண்கவர் புகைப்பட தொகுப்பு இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share