-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
தன்னம்பிக்கை அதிகரிக்கக் கூடிய காலகட்டம். அதைத் தலைகனமாக மாற்றிக்கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும். திட்டமிட்டு செயல்பட்டால், நன்மைகள் தொடரும், பதவியுடனான இடமாற்றம் வரவாய்ப்பு உண்டு.
ஆராயாமல் பிறர் பேச்சைக் கேட்க வேண்டாம். பொறுப்புகள் அதிகரித்தாலும் புலம்பாமல் ஏற்பதே நல்லது. குடும்பத்தில் உறவுகள் வருகையும் அதனால் ஆனந்தமும் அதிகரிக்கும்.
இளம் வயதினர் சுபகாரியத்தில் பெற்றோர், பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் விலகும். செய்யும் தொழிலில் உழைப்புக்கு ஏற்ப வளர்ச்சி அதிகரிக்கும்.
புதிய ஒப்பந்தங்கள் சிலருக்கு மகிழ்ச்சி தரும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு சீராக இருக்கும். சட்டப்புறம்பின் நிழலைக் கனவிலும் தவிருங்கள். படைப்புத் துறையினர் திட்டமிடலில் சறுக்கல் கூடாது. மாணவர்கள் அதிகாலைப் படிப்பை வழக்கமாக்குங்கள்.
வாகனத்தில் சிறு பழுதும் உடன் சீர் செய்யுங்கள். வேகத்தைத் தவிருங்கள். நரம்பு, எலும்பு, தலைசுற்றல், கழுத்து உபாதைகள் வரலாம். கணபதி வழிபாடு களிப்பு தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம் (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : மிருகசீரிஷம் (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: பரணி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)